தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புலன்விசாரணையின்போது அமைச்சர் ஈஸ்வரன் சிங்கப்பூரில் இருப்பார்

1 mins read
d656914d-a8ff-4093-a529-6ff5a9fde43f
விடுமுறையில் செல்லும்படி அமைச்சர் ஈஸ்வரனுக்கு பிரதமர் லீ சியன் லூங் உத்தரவிட்டு உள்ளார்.  - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இப்போது விடுப்பில் இருக்கிறார். லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் அவர் உதவி வருகிறார்.

அமைச்சர் ஈஸ்வரன் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து வருவார் என்று பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

சேனல் நியூஸ் ஆசியா நிறுவனத்திற்கு அறிக்கை மூலம் பதிலளித்த பிரதமர் அலுவலகம், திரு ஈஸ்வரன் எந்த அதிகாரபூர்வ வளங்களையும் அரசாங்கக் கட்டடங்களையும் எட்ட வழி இருக்காது என்று தெரிவித்தது.

தான் கண்டறிந்த ஒரு விவகாரம் தொடர்பிலான புலன்விசாரணையில் திரு ஈஸ்வரன் உதவி வருவதாக அந்தப் பிரிவு புதன்கிழமை தெரிவித்திருந்தது.

மேல் விவரங்கள் எதையும் அந்தப் பிரிவு தெரிவிக்கவில்லை. புலன்விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்லும்படி அமைச்சர் ஈஸ்வரனுக்குப் பிரதமர் லீ சியன் லூங் உத்தரவிட்டார்.

திரு ஈஸ்வரன் விடுப்பில் இருக்கையில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தற்காலிக போக்குவரத்து அமைச்சராகச் செயல்படுவார்.

திரு ஈஸ்வரனின் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஈஸ்வரனின் பணிகளைக் கவனிப்பார்கள் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்