தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓங் பெங் செங் கைதாணையைத் தொடர்ந்து எச்பிஎல் பங்குகள் சரிந்தன

1 mins read
91e8bfac-3992-4bbf-8a32-83f6aa1462bc
கோடீஸ்வர வணிகரான ஓங் பெங் செங் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திலிருந்து வெளியேறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எச்பிஎல் நிர்வாக இயக்குநர், இணை நிறுவனர், கட்டுப்பாட்டு பங்குதாரர் திரு ஓங் பெங் செங் மீது, லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐபி) கைதாணை அறிவிக்கப்பட்ட செய்தியால் எச்பிஎல் பங்குகள் இன்று வெள்ளிக்கிழமை சரிவுகண்டன.

பங்குச் சந்தை திறக்கப்பட்டபோது பங்குகள் 21 காசு குறைந்து $3.65 ஆக இருந்தது. காலை 9.07 மணிக்கு 15 காசு அல்லது 3.9 விழுக்காடு குறைந்து $3.71ஆக வர்த்தகம் இடம்பெற்றது. கிட்டத்தட்ட 59,000 பங்குகள் கைமாறின.

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில், போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுடனான தொடர்புபற்றிய விசாரணையில் சிபிஐபிக்கு திரு ஓங் உதவுவதாக சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த மனுவில் எச்பிஎல் தெரிவித்துள்ளது. $100,000 பிணையில் வெளிவந்த திரு ஓங்கிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

திரு ஓங் ஜூலை 14 முதல் பயணம் செய்வார். சிங்கப்பூர் திரும்பியதும் தனது கடவுச்சீட்டை சிபிஐபியிடம் ஒப்படைப்பார்.

சிங்கப்பூர், இந்தோனீசியா, இத்தாலி, மாலத்தீவுகள், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகளில் 39 ஹோட்டல்கள், ரிசார்ட் விடுதிகளை எச்பிஎல் கொண்டுள்ளது. ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ், ஹார்ட் ராக் ஹோட்டல்கள், ஹில்டன் இன்டர்நேஷனல், மேரியட் இன்டர்நேஷனல் ஆகியவை அதில் அடங்கும்.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘ஹார்ட் ராக் கஃபே’ விற்பனை நிலையங்களையும் அந்நிறுவனம் நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்