சிங்கப்பூரில் ஆகஸ்ட்-அக்டோபர் காலகட்டத்தில் மொத்தம் 11,019 வாகன உரிமைச் சான்றிதழ்கள் கிடைக்கும்.
இது, இப்போதைய மூன்று மாத கால அளவைவிட 5.6% அதிகம்.
கடந்த மே மாதம் அசாதாரணமான ஒரு சரியாக்கம் இடம்பெற்றது. அதன் ஒரு பகுதியாக சான்றிதழ் எண்ணிக்கை கூடி இருக்கிறது.
தனிப்பட்ட ரீதியில் பார்க்கையில், மோட்டார்சைக்கிள் நீங்கலாக எல்லா சான்றிதழ் பிரிவுகளிலும் அவற்றின் எண்ணிக்கை கூடும்.
மோட்டார்சைக்கிள்களைப் பொறுத்தவரை சான்றிதழ்களின் எண்ணிக்கை 9.2% குறைந்து 2,957 ஆக இருக்கும்.
சிறிய, ஆற்றல் குறைவான கார்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை 12.7% அதிகரித்து 3,785 ஆக இருக்கும்.
பெரிய, ஆற்றல்மிக்க கார்களை வாங்குவோர், விற்போரைப் பொறுத்தவரை 2,816 அல்லது 5.7% அதிக சான்றிதழ்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொதுப் பிரிவில் 4.4% அதிகமாக 777 சான்றிதழ்கள் கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக வாகனப் பிரிவில் 66.4% அதிகமாக 684 சான்றிதழ்களை வாங்கலாம்.
முந்தைய மூன்று மாத காலத்தில் பதிவில் இருந்து அகற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் சான்றிதழ்கள் கொடுக்கப்படுகின்றன என்று இந்தத் தொழில்துறை கண்காணிப்பாளர்கள் கூறினர்.