டாஸோங் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச வயலின் வகுப்புகள்

1 mins read
65063743-a6f0-4bca-9f21-8ea56135c5e3
தொடக்கநிலை 1 முதல் 3 வரை, அனைத்து மாணவர்களுக்கும் வாரந்தோறும் வயலின் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வயலின் இசைக்கருவியை வாசிக்கக் கற்றுத்தரும் தனியார் வகுப்பு ஒவ்வொன்றுக்கும் $160 முதல் $320 வரை செலவாகலாம்.

அத்தகைய வகுப்புகள் எல்லா குடும்பங்களுக்கும் கட்டுப்படியாகாது என்பதை அறிந்திருக்கும் டாஸோங் தொடக்கப்பள்ளி, 2014ல் திட்டம் ஒன்றைத் தொடங்கியது. அப்பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவரும் வயலினை வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம்.

கல்வி அமைச்சு, தனியார் நன்கொடையாளர்களான ஓய்வுபெற்ற தம்பதியரின் ஆதரவுடன் அப்பள்ளி வயலின் கருவிகளை வாங்கவும் பயிற்றுநர்களைப் பணியமர்த்தவும் தொடங்கியது.

தொடக்கநிலை 1 முதல் 3 வரை, அனைத்து மாணவர்களுக்கும் வாரந்தோறும் வயலின் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதற்காக அவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. டாஸோங் தொடக்கப்பள்ளியின் ‘கலைக் கல்வி: வாழ்வுக்காக கற்றல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த வகுப்புகள் இடம்பெறுகின்றன.

வயலின் வாசிப்பதில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்கள், தொடக்கநிலை 2ல் அடிப்படை இசைத் திறன்களைக் கற்றுக்கொள்கின்றனர். இணைப்பாட நடவடிக்கையாக அப்பள்ளியின் இளநிலை பல்லிசைக் குழுவில் சேர அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்.

அந்தக் கட்டத்தில் பிற இசைக்கருவிகளை வாசிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

132 உறுப்பினர்கள், ஒன்பது ஆசிரியர்களைக் கொண்டுள்ள பல்லிசைக் குழு, டாஸோங் தொடக்கப்பள்ளியின் ஆகப்பெரிய இணைப்பாட நடவடிக்கையாக உள்ளது. 2016 அக்டோபரில் அது தொடங்கப்பட்டது. அப்போது முதற்தொகுதியாக 60 மாணவர்கள் அதில் சேர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்