தன் கட்சிக்காரர்களிடமிருந்து கிட்டத்தட்ட $76 மில்லியன் கையாடியதற்காக முன்னாள் வழக்கறிஞர் ஜெஃப்ரி ஒங் சு ஓங்கிற்குத் திங்கட்கிழமையன்று 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, அவர் நடத்திவந்த நிறுவனத்துக்காக ‘அல்லைடு டெக்னாலஜிஸ்’ எனும் நிறுவனத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த $33 மில்லியனுக்கும் மேலான தொகையும் அதில் அடங்கும்.
அச்செயல்களால் திரு ஓங்கிற்குத் தனிப்பட்ட முறையில் ஏறக்குறைய $7.2 மில்லியன் மதிப்பிலான அனுகூலங்கள் கிடைத்ததாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஓங், எவ்வித இழப்பீட்டையும் கொடுக்கவில்லை.
சிங்கப்பூரில் வழக்கறிஞர் ஒருவர் பணம் கையாடியிருக்கும் வழக்குகளில், ஆகப் பெரிய தொகை சம்பந்தப்பட்டது ஓங்கின் வழக்கில்தான்.
அத்தகைய குற்றங்களுக்காக வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் உறுப்பினருக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆகப் பெரிய தண்டனையும் இது.