தகாத உறவு: லியோன் பெரேராவும் நிக்கோல் சியாவும் பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகினர்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிக்கோல் சியாவும் தங்களுக்கு இடையிலான தகாத உறவு காரணமாக கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

நாட்டின் அரசியல் சூழலை உலுக்கியிருக்கும் இரண்டாவது சம்பவம் இது.

பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் இருவரின் பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

திரு பெரேராவும் திருவாட்டி சியாவும் அடையாளம் தெரியாத இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாக உட்கார்ந்திருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி சிங்கப்பூர் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் பிரித்தம் சிங்கின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேலாங்கில் உள்ள பாட்டாளிக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையிலான திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருப்பதுபோல காட்டும் காணொளி குறித்து விசாரிக்கப்படும் என்று முன்னதாக பாட்டாளிக் கட்சி தலைமை அறிவித்த நிலையில் இந்த செய்தியாளர் கூட்டம் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருவதாகவும் உண்மைத் தகவல் கிடைத்த பிறகு இது குறித்து கருத்து தெரிவிக்கப்படும் என்றும் பாட்டாளிக் கட்சி தெரிவித்திருந்தது.

அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய நடத்தைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியிருந்தது.

ஓர் உணவகத்தில் ஒரு குவளை ஒயினுடன் திரு பெரேரா, திருவாட்டி சியாவைப் போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் கையை வருடிக் கொடுப்பதை 15 வினாடி காணொளியில் பார்க்க முடிந்தது.

திரு பெரேராவுக்கும் திருவாட்டி சியாவுக்கும் ஏற்கெனவே திருமணமாகி இருவருக்கும் தலா இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

பாட்டாளிக் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செல்வாக்குமிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய நிர்வாகக் குழுவில் இருவரும் அங்கம் வகிக்கின்றனர்.

திரு பெரேரா, 53, அல்ஜுனியட் குழுத் தொகுதியில் சிராங்கூன் வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

கட்சியின் ஊடகப் பிரிவுக்கும் அவர் தலைவராக இருந்தார்.

திருவாட்டி சியா, 36, பாட்டாளிக் கட்சியின் இளையர் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமையிலான மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களிடம் தோல்வியடைந்த பாட்டாளிக் கட்சி குழுவில் திருவாட்டி சியா இடம்பெற்றிருந்தார்.

2020ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2021 முற்பகுதி வரை திரு பெரேராவுக்கும் திருவாட்டி சியாவுக்கும் இடையே தகாத உறவு இருந்தது குறித்து கட்சி வட்டாரத்தில் வதந்தி பரவியது என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 நடுப்பகுதியிலிருந்து இருவரும் ஹோட்டல்களில் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும் முறை தவறி நடந்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்த விவகாரம் 2021 முற்பகுதியில் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது திருவாட்டி சியாவுக்கு திரு பெரேரா வழிகாட்டியாக இருந்ததால் இருவரும் அதிக நேரம் இணைந்து செயல்பட்டதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் மேலாக அவர்களிடையே நெருக்கம் அதிகரித்ததை கட்சி வட்டாரத்தில் உணரப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிலர் கூறினர்.

பாட்டாளிக் கட்சியிலிருந்து திரு லியோன் பெரேரா, திருவாட்டி நிக்கோல் சியா விலகியதை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் செய்தியாளர் அறிவித்தனார். உடன் கட்சியின் தலைவர் சில்வியா லிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
லியோன் பெரேரா  கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நிக்கோல் சியா கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!