சிங்கப்பூரில் ஆகப் புதிய ஏலத்தில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அவ்வளவாக மாற்றமின்றி இருந்தது.
சிறிய, ஆற்றல் குறைந்த கார்களுக்காகவும் மின்சார வாகனங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் சான்றிதழ் கட்டணம் $97,000லிருந்து $95,202 ஆக 1.85% குறைந்தது.
1,600 சிசிக்கும் அதிக ஆற்றல் உள்ள இயந்திரங்களைக் கொண்ட அல்லது 130பிஹெச்பிக்கும் அதிக ஆற்றலைக் கொண்ட வாகனங்கள் 110கிலோவாட்டுக்கும் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய மின் வாகனங்களுக்கும் உரிய சான்றிதழ் கட்டணம் $118,001 ஆக இருந்தது.
இது முந்தைய ஏல கட்டணத்தைவிட ஒரே ஒரு வெள்ளி குறைவாகும்.
மோட்டார்சைக்கிள் நீங்கலாக எந்த வகை வாகனத்திற்கும் உரிய, பொதுப் பிரிவுச் சான்றிதழ் விலை பெரும்பாலும் பெரிய கார்களுக்கு 0.92% கூடி $112,110 ஆக இருந்தது.
வர்த்தக வாகனங்களுக்கான சான்றிதழ் கட்டணம் 0.27% குறைந்து $82,001 ஆக இருந்தது.
மோட்டார்சைக்கிள்களுக்கான சான்றிதழ் கட்டணம் கொஞ்சம் கூடி $10,501 ஆக இருந்தது.