டான் பூன் ஹ்வீ, 35, என்ற ஆடவர் திருந்தாத குற்றவாளி. அவருக்கு 2019ல் $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பல பெண்களை, அவர்களின் பாதத்தைத் தொட்டு மானபங்கம் செய்ததற்காக 2022ஆம் ஆண்டில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் திருந்தவில்லை.
டான் பூன் ஹ்வீ அதேபோன்ற குற்றங்களைச் செய்து மீண்டும் சிறைக்குச் சென்றார்.
மானபங்கம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ஆடவருக்கு 13 மாதச் சிறைத் தண்டனையும நான்கு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பால் உணர்வு உந்தல்களால் அந்த ஆடவர் பெண்களின் பாதங்களைத் தொட்டு இருப்பதாக அரசாங்க பொது வழக்குரைஞர் விசாரணையில் வாதாடினார்.
டான், 2022 ஏப்ரல் 6ஆம் தேதி இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு வாரம், ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலையான பின்னும் அவர் திருந்தவில்லை.

