சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை சரிவு

1 mins read
c8974f20-365c-4227-868f-7b7102f11bc3
உள்நாட்டுத் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டன. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

ஏற்றுமதிச் சந்தைகளைச் சார்ந்திருக்கும் சிறிய நிறுவனங்கள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிவாங்கின. மாறாக, உள்நாட்டு பயனீட்டாளர்களைக் கையாளும் நிறுவனங்கள் சிறப்பாகச் செய்திருப்பதைப் புதியதொரு அறிக்கை ஒன்று சுட்டியது.

100,000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் குறித்த தரவைக் கொண்டு ஓசிபிசி வங்கி தொகுத்துள்ள குறியீடு இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 49 புள்ளிகளுடன் வந்தது. ஒப்புநோக்க, முதலாம் காலாண்டில் அது 49.9 புள்ளிகளைப் பெற்றிருந்தது. 50க்கும் குறைவான புள்ளிகளைப் பெறும் குறியீடு, வர்த்தக நடவடிக்கை குறைவதைக் குறிக்கிறது.

விற்பனை வருவாயும் செலவினமும் குறைவாக இருப்பதைக் குறியீடு சுட்டியது. அவ்விரண்டும் சுற்றுச்சூழல் வலுவிழப்பதைக் குறிக்கின்றன.

உள்நாட்டுத் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டன. கட்டட, கட்டுமானம், கல்வி, வர்த்தக சேவைத் துறைகள் அக்குறியீட்டில் 50 புள்ளிகளுக்கும் மேலாக வந்தன.

குறிப்புச் சொற்கள்