தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீதித்துறை ஆணையர்கள் நியமனம்

1 mins read
ada08045-abfb-4833-8c0a-a8fd8c64869e
(இடமிருந்து) திருவாட்டி கிறிஸ்டி டான், முஹம்மது ஃபைசல் முஹம்மது அப்துல் காதிர், கிறிஸ்டஃபர் டான் ஃபெங் வீ. - படம்: பிரதமர் அலுவலகம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதித் துறை ஆணையர்களை அதிபர் நியமித்து உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அரசு நீதிமன்றப் பதிவாளர் கிறிஸ்டஃபர் டான் ஃபெங் வீ, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் மூத்த வழக்கறிஞர் கிறிஸ்டி டான் ருயான் ஆகிய இருவரும் தங்களது ஆணையர் பொறுப்பை அக்டோபர் 1 முதல் தொடங்குவர். ஈராண்டு காலத்துக்கு அவர்கள் அந்தப் பொறுப்பில் இருப்பர்.

அதேபோல தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் இரண்டாம் தலைமை அரசு வழக்கறிஞரான முஹம்மது ஃபைசல் முஹம்மது அப்துல் காதிர் 2024 மே 2 முதல் தமது பொறுப்பைத் தொடங்குவார். இவரது பதவிக்காலமும் ஈராண்டு ஆகும்.

புதிய நியமனங்கள் மூலம், உச்ச நீதிமன்றத்தில் 28 நீதிபதிகள், மூன்று நீதித்துறை ஆணையர்கள், ஆறு மூத்த நீதிபதிகள் மற்றும் 19 அனைத்துலக நீதிபதிகள் இருப்பர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்