தீவு விரைவுச்சாலையிலிருந்து தாம்சன் சாலை நோக்கி வெளியேறும் 17D சாலைப்பகுதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மவுண்ட் பிளசண்ட் சாலைக்குத் திருப்பி விடப்படும்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தை நகர மையத்துடன் இணைக்கும் வடக்கு-தெற்கு பாதையின் கட்டுமானப் பணிக்காகச் சாலைப்பகுதி திருப்பி விடப்படுகிறது.
தற்போதுள்ள துணைச்சாலை மூடப்பட்டு, மவுண்ட் பிளசண்ட் சாலைக்கு இட்டுச்செல்லும் புதிய துணைச்சாலை திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. வாகனமோட்டிகள் வேறொரு சந்திப்பில் தாம்சன் சாலைக்குள் திரும்பலாம்.
பேருந்துச் சேவைகள் 132, 156 ஆகியவை பழைய காவல்துறைப் பயிற்சிக் கழகத்திற்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்குப் பதிலாக மவுண்ட் பிளசண்ட் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்.
வடக்கு-தெற்கு பாதை 21.5 கிலோமீட்டர் நீளமானது. அது கட்டி முடிக்கப்பட்டவுடன், மத்திய விரைவுச்சாலை, புக்கிட் தீமா விரைவுச்சாலை போன்ற முக்கிய சாலைகளில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

