சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள்: 25 பேர் கைது, $19,000க்குமேல் பறிமுதல்

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள்: 25 பேர் கைது, $19,000க்குமேல் பறிமுதல்

1 mins read
ac6925e7-42fa-4386-953f-c1649f2bd79b
விளையாட்டு தொடர்பான கருவிகள் அதிரடிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் கம்பாஸ் கிரசென்டில் உள்ள தொழிற்சாலையில் 13 ஆடவர்களும் 12 மாதர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 31 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவு வியாழக்கிழமை நடத்திய திடீர் சோதனையில், 23 பேருக்கு விளையாட்டு சேவை வழங்குநராக 39 வயது ஆடவரும் 52 வயது மாதும் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

$19,752 மதிப்பிலான ரொக்கம், 11 கைப்பேசிகள், விளையாட்டு தொடர்பான கருவிகள் அதிரடிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

அனைத்துவித சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளையும் தான் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட காவல்துறை, அவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக தான் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்