மிகைநேரம் வேலை பார்க்கும்படி ஊழியர்களிடம் கூறும் முதலாளிகள், அப்படி வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியத்தைத் தராமல் இருந்துவிட முடியாது.
மிகைநேரம் வேலை பார்க்கும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலை ஒப்பந்தத்தின்படி அதற்கான ஊதியத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.
ஊழியர் ஒருவர், மாதம் ஒன்றுக்கு கூடினபட்சமாக 72 மணி நேரம் மிகைநேரம் வேலை பார்க்கலாம் என்று சட்டம் சொல்கிறது.
இந்த நேரத்திற்கு மேலும் வேலையை வாங்கிக்கொண்டு சில முதலாளிகள் ஊழியருக்கு அதற்கான சம்பளத்தைக் கொடுப்பதில்லை.
இத்தகைய ஒரு வழக்கை அண்மையில் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அது இதில் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அந்தத் தீர்ப்பு, ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதாக இருக்கிறது.
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலும் ஊழியர்கள் மிகைநேரம் வேலை செய்தால், அந்த வேலைக்கு முதலாளிகள் சம்பளத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்படி ஒரு மாதத்தில் 72 மணி நேரம்தான் கூடினபட்சமாக மிகைநேரம் வேலை பார்க்கலாம். அதற்கு மேலும் ஊழியர்கள் பார்க்கும் மிகைநேர வேலைக்கு சம்பளம் தர தேவையில்லை என்று வழக்கு விசாரணையின்போது அந்த நிறுவனம் வாதிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், ஊழியர்கள் செய்த அனைத்து மிகைநேர வேலைகளுக்கும் சம்பளத்தைக் கொடுக்கும்படி அந்த நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சட்டம் ஊழியர்களின் உரிமையை பாதுகாக்கத்தானே தவிர முதலாளிகளை அல்ல என்பதை தீர்ப்பு சுட்டிக்காட்டியது.


