பிள்ளைகளுடன் அணிவகுப்பு வாணவேடிக்கைகளைக் கண்டு ரசிக்க...

1 mins read
4228985b-50e9-4088-b570-f9d17c8a24f3
தேசிய தின அணிவகுப்பின் தேசிய கல்விக் காட்சியின்போது காணப்பட்ட வாணவேடிக்கைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகளை நீங்கள் தவறவிட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம், சிறுவர் விளையாட்டுப் பூங்காவான ‘பொரோரோ பார்க் சிங்கப்பூர்’ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளை நாடலாம்.

மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் அமைந்துள்ள இந்த விளையாட்டு இடம் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வாணவேடிக்கைகளையும் வான் சாகசங்களையும் பெரியவர்களும் சிறுவர்களும் கண்டு ரசிக்க, அதன் தனியார் பார்வையிடும் மேல்தளத்தை மக்களுக்குத் திறந்துவிட உள்ளது.

பெரிய திரை ஒன்றில் அணிவகுப்பின் அங்கங்கள் நேரடியாகக் காட்டப்படும் வரை, விளையாட்டு இடத்தில் பிள்ளைகள் தங்களின் நேரத்தை உல்லாசமாகக் கழிக்கலாம்.

அத்துடன் பிள்ளைகள் பெரிதும் விரும்பும் பொரோரோ பெங்குவின் அதன் நண்பர்களுடன் வருகை தரவும் உள்ளது. மக்கள் அவற்றுடன் படம் எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு நுழைவுச்சீட்டுகள் உண்டு. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான இந்த நிகழ்வுக்கு 200 பேர் பதிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்