தமிழ் முரசு தேசிய தின அணிவகுப்பு மற்றும் அதன் முன்னோட்டங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை வழங்க உள்ளது.
முன்னோட்டம் 1க்கு நான்கு ஜோடி நுழைவுச்சீட்டுகளும் முன்னோட்டம் 2 மற்றும் அணிவகுப்புக்குத் தலா மூன்று ஜோடி நுழைவுச்சீட்டுகளும் உள்ளன.
சமூக ஊடகம்வழி நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்த நுழைவுச்சீட்டுகளை வெல்லலாம்.
இதில் பங்கேற்க, இன்ஸ்டகிராமில் தமிழ் முரசைப் பின்தொடரவும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தேசிய தினத்தை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் என்பதற்கான படம் அல்லது காணொளியைப் பகிரவும். சிங்கப்பூருக்கான உங்கள் விருப்பங்கள், சிங்கப்பூர் எவ்வாறு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது, சமூக ஈடுபாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய உங்கள் தனித்துவமான சிங்கப்பூர் கதையைக் காட்டும் படங்கள் அல்லது காணொளிகளை நீங்கள் இடுகையிடலாம் .
உங்கள் பதிவை 50 வார்த்தைகளுக்கு மிகாமல் தலைப்பிடவும், #MySingaporeStory மற்றும் #UniteAsOneSg ஹேஷ்டேக்குகளைச் சேர்க்கவும். உங்கள் பள்ளிக்கால கொண்டாட்டங்களின் பழைய படங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிங்கப்பூரின் முன்னேற்றம், பன்முகத்தன்மை மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பான உங்கள் தனிப்பட்ட கதைகள், அனுபவங்கள், விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில், சமூக முன்முயற்சிகளுக்கான உங்கள் ஆதரவையும் வெளிப்படுத்துங்கள்.
வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் வரை உங்கள் இன்ஸ்டகிராமில் சுயவிவரங்களை பொதுவில் வைத்திருக்க நினைவில்கொள்ளுங்கள். இதன்மூலம் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாம்.
அனைத்து உள்ளீடுகளும் எங்களின் இன்ஸ்டகிராமைக் குறிக்க வேண்டும்; போட்டி ஹேஷ்டேக்குகளை கொண்டிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
கருப்பொருளின் பொருத்தம், விளக்கக்காட்சி, அழகியலின் தனித்துவம் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளீடுகள் மதிப்பிடப்படும்.
முன்னோட்டம் 1க்கு ஜூலை 20 ஆம் தேதியும், முன்னோட்டம் 2க்கு ஜூலை 27 ஆம் தேதியும், தேசிய தின அணிவகுப்பிற்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் வெற்றியாளர்கள் யார் என்று அறிவிக்கப்படும்.
முன்னோட்டம் 1 ஜூலை 22ஆம் தேதியும் முன்னோட்டம் 2 ஜூலை 29ஆம் தேதியும் இடம்பெறும்.