சிங்கப்பூரின் பணவீக்கம் 2வது மாதமாக தொடர்ந்து மெதுவடைந்தது

சிங்கப்பூரின் பணவீக்கம் 2வது மாதமாக தொடர்ந்து மெதுவடைந்தது

2 mins read
1af9e7c7-824c-4fe7-888a-4a7db8f11659
உணவுக்கான பணவீக்கம் மே மாத 6.8 விழுக்காட்டில் இருந்து ஜூனில் 5.9 விழுக்காட்டுக்குக் குறைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பயனீட்டாளர் விலைகள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக மெதுவடைந்துள்ளன. உணவு, சேவை, தனியார் போக்குவரத்து பணவீக்கத்தின் வீழ்ச்சியே இதற்கு காரணமாகும்.

சிங்கப்பூரின் வீட்டுச் செலவுகளைப் பிரதிபலிக்கும் தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் பார்த்தால் முந்தைய மாத 4.7 விழுக்காட்டிலிருந்து ஜூனில் 4.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

2022 மத்தியிலிருந்து தற்போதுதான் மூலாதாரப் பணவீக்கம் இந்தச் சரிவைச் சந்தித்துள்ளது.

முக்கிய பணவீக்கம் அல்லது ஒட்டுமொத்த பயனீட்டாளர் குறியீடும் மெதுவடைந்தது. இது, ஆண்டு அடிப்படையில் மே மாத 5.1 விழுக்காட்டிலிருந்து ஜூனில் 4.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

கார் விலைகளில் ஏற்பட்ட சிறிய ஏற்றம், பெட்ரோல் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் தனியார் போக்குவரத்து பணவீக்கம் குறைந்தது.

ஆனால் முக்கிய பணவீக்கத்திற்கான அதிகாரபூர்வ கணிப்புகள் ஆண்டு அடிப்படையில் 4.5 விழுக்காட்டுக்கும் 5.5 விழுக்காட்டுக்கும் இடையே மேம்பட்டுள்ளன. இருந்தாலும் ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டால் இது குறைவாகும்.

முக்கிய பணவீக்க மதிப்பீடுகள் 3.5 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரை ஒரே நிலையில் உள்ளன.

இந்நிலையில் மூலாதாரப் பணவீக்கம் 2023ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் மேலும் மெதுவடையும் என்று சிங்கப்பூரின் நாணய ஆணையமும் வர்த்தகம் தொழில் அமைச்சும் எதிர்பார்க்கின்றன.

உள்நாட்டு தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இறுக்கமும் இறக்குமதி செலவுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இதற்கு வழி வகுத்துள்ளது.

தனியார் போக்குவரத்து பணவீக்கம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மே மாத 7.2 விழுக்காட்டிலிருந்து ஜூனில் இது, 5.8 விழுக்காட்டுக்குச் சரிந்துள்ளது.

உணவுப் பணவீக்கம் மே மாத 6.8 விழுக்காட்டிலிருந்து ஜூனில் 5.9 விழுக்காடாக மெதுவடைந்துள்ளது.

விடுமுறைச் செலவுகளையும் விமானக் கட்டணங்களையும் பிரதிபலிக்கும் சேவைகளுக்கான பணவீக்கத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை. இது, முந்தைய மாதத்தின் 3.9 விழுக்காட்டிலிருந்து 3.6 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

வீட்டு வாடகை கட்டண உயர்வு மெதுவடைந்ததால் தங்குமிடச் செலவுக்கான பணவீக்கம் 4.5 விழுக்காட்டுக்குக் குறைந்தது. மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் பணவீக்கமும் மெதுவடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்