எரிசக்தி உருமாற்றத்திற்கான உடன்பாடு: ஹெச்எஸ்பிசி-கெப்பல் கையெழுத்து

எரிசக்தி உருமாற்றத்திற்கான உடன்பாடு: ஹெச்எஸ்பிசி-கெப்பல் கையெழுத்து

1 mins read
0895ac35-3d5f-42d4-ab72-6b7815e8f972
ஹாங்காங்கின் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மைக்கு கெப்பல் கார்ப்பரேஷன் ஆதரவு வழங்கி வருகிறது. - படம்: கெப்பல் கார்ப்

சிங்கப்பூர்: எரிசக்தி உருமாற்ற வாய்ப்புகளைப் பெறுவதற்காக ஹெச்எஸ்பிசி-யுடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு இருப்பதாக கெப்பல் கார்ப்பரேஷன் தெரிவித்து உள்ளது.

சீனப் பெருநிலத்திலும் ஆசியாவிலும் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் அந்த உடன்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அது கூறியது.

கெப்பல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உள்கட்டமைப்புப் பிரிவுக்கும் ஹெச்எஸ்பிசியின் ஹாங்காங் அலுவலகத்திற்கும் இடையிலான உடன்பாடு அது.

சீனாவின் குவாங்ஸு, ஷென்ஸென் மற்றும் ஹாங்காங்கில் குறைந்த அளவிலான கரிமப் பயன்பாட்டின் மீது உடன்பாடு கவனம் செலுத்தும். எரிசக்திச் சிக்கனத்தைக் கடைப்பிடித்து செலவுகளைக் குறைக்கப் பயனாளர்களுக்கு இந்த உடன்பாடு உதவும்.

திங்கட்கிழமை நடைபெற்ற உடன்பாடு கையெழுத்திடப்படும் நிகழ்வை சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பார்வையிட்டார்.

ஹாங்காங்கின் முதல் ஒருங்கிணைந்த கழிவு நிர்வாக முறைக்கு கெப்பல் கார்ப்பரேஷன் ஆதரவு வழங்கி வருகிறது. ஹாங்காங்கின் நகரசபை திடக் கழிவுக்கான நிர்வாக முறை அது. கெப்பலின் தொழில்நுட்பத்தை அது பயன்படுத்தும்.

இதற்கான குத்தகை கெப்பலுக்கும் ஸென் ஹுவா என்ஜினியரிங் நிறுவனத்துக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஷெக் குவு சாவ் தீவிலிருந்து ஒருங்கிணைந்த கழிவு நிர்வாகத்தைச் செயல்படுத்த அந்தக் குத்தகை வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்