சிங்கப்பூர் வானில் இரு பிரம்மாண்ட நிலாக்கள்

1 mins read
393870ec-fd2e-4741-8ab0-a5c395bf32b5
இவ்வாண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி காணப்பட்ட ‘சூப்பர் மூன்’ பெருநிலா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அடுத்த மாதம் இரு பிரம்மாண்ட நிலாக்களை (சூப்பர் மூன்) காணலாம்.

பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும்போது அது மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்கும்.

‘ஸ்டர்ஜன் நிலவு’ ஆகஸ்ட் 1ஆம் தேதியும் ‘நீல நிலவு’ ஆகஸ்ட் 31ஆம் தேதியும் முறையே தோன்றும் என்று அறிவியல் நிலைய ஆய்வகம் தெரிவித்தது.

‘ஸ்டர்ஜன் நிலவு’ பூமிக்கு அருகில் 357,581 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும்.

‘நீல நிலவு’ இவ்வாண்டு பூமிக்கு ஆக அருகில் தோன்றக்கூடிய, ஆகப் பிரகாசமான நிலவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது பூமிக்கு அருகில் 357,182 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்