ஓட்டுநர் இல்லாத வாகனங்களில் பயன்படக்கூடிய மனித இயந்திரத் தொழில் நுட்பங்களை உருவாக்கவும் ராணுவ, வர்த்தகப் பயனீடுகளுக்கான சாதனங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் $20 மில்லியன் மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தத் தொகையைத் தொழில்துறைகளையும் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த ஐந்து ஆய்வுக் குழுக்கள் பயன்படுத்திக்கொள்ளும்.
ஏஐ சிங்கப்பூர் அமைப்பு புதன்கிழமை இதனை அறிவித்தது.
மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்களில் மூன்று குழுக்கள், தானியங்கி வாகனங்களுக்கான மனித இயந்திர சாதனங்களை உருவாக்கும்.
இதர இரண்டு குழுக்கள், ராணுவ சாதனங்களில் பயன்படக்கூடிய புதிய சாதனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கும் சாட்ஜிபிடியை உருவாக்க பயன்படுத்தப்படும் மனித இயந்திர தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கப் பாடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.

