அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து, காப்புறுதி வைத்திருப்போர் தங்கள் பயனாளிகளை இணையத்தில் முன்மொழிய முடியும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
பயனாளிகளை முன்மொழிவதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காப்புறுதி வைத்திருப்போர் ஒலி-காட்சி இணைப்பைக் கொண்டு இணையப் படிவத்தில் கையெழுத்திட ஒருவரை சாட்சியாகக் கொண்டிருப்பது மின்னிலக்க அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்கும்.
காப்புறுதி வைத்திருப்போரின் சூழ்நிலை குறித்து இணையத்தில் உறுதிமொழி அளிக்க ஒருவரைக் கொண்டிருப்பது இந்த அணுகுமுறையின் மற்றொரு பகுதி.

