ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் தீவு விரைவுச்சாலை, தெம்பனிஸ் விரைவுச்சாலை வெளிச்சாலைக்கு அருகே புதன்கிழமை இரவு கார் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.
இணையத்தில் வலம் வந்த புகைப்படங்கள், அந்தக் காரிலிருந்து புகை வெளியேறுவதைக் காட்டின.
இந்தத் தீச்சம்பவம் குறித்து புதன்கிழமை இரவு 11.50 மணியளவில் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்தக் காரின் இயந்திரப் பகுதி சம்பந்தப்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.