வேலை தேடிய வெளிநாட்டினர் 832 பேர் சம்பந்தப்பட்ட வழக்குடன் தொடர்புடைய நிறுவன இயக்குநர் புதன்கிழமை 178 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் கூடுதல் காலம் சிறையில் இருக்க வேண்டும். வேலை தேடிய அந்த நபர்கள் $600,000க்குமேல் இழந்தனர்.
கிளரென்ஸ் லிம் ஜுன் யாவ்வுக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த டெரி டான் சூவுக்கும் எதிரான குற்றம் 2019ல் நிரூபணமானது.
லிம்முக்கு ஐந்து ஆண்டு, ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, இழப்பீடாக $174,385 வழங்க 2021ல் உத்தரவிடப்பட்டிருந்தது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் 178 குற்றச்சாட்டுகளை அவர் புதன்கிழமை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலை தேடிய வெளிநாட்டினர் செலுத்தியிருந்த $300,000க்கு மேற்பட்ட கட்டணத்துடன் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்புடையவை. லிம்முக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பிறகு இப்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையை அவர் ஆற்றத் தொடங்குவார்.

