லீ சியன் யாங் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுப்போம்: சண்முகம், விவியன்

சிங்கப்பூர்: திரு லீ சியன் யாங் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது வழக்கு தொடுக்கப்போவதாக அமைச்சர்கள் கா. சண்முகமும் விவியன் பாலகிரு‌‌ஷ்ணனும் கூறியுள்ளனர்.

சட்ட, உள்துறை அமைச்சரான திரு சண்முகம், தானும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் பாலகிரு‌‌ஷ்ணனும் வியாழக்கிழமையன்று திரு லீக்கு வழக்கறிஞர்களின் கடிதங்களை அனுப்பியதாக வியாழக்கிழமை மாலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

“நாங்கள் ஊழல் செய்ததாகவும், அனுமதியின்றி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து தனிப்பட்ட சலுகை பெற்றதாகவும், ரிடவ்ட் ரோடு எண் 26, 31 பங்களாக்களின் புதுப்பிப்புப் பணிக்கு ஆணையத்தைப் பணம் கட்டச் செய்ததாகவும் லீ சியன் யாங் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டிருந்தார்.

திரு லீ மன்னிப்பு கேட்டு, குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொண்டு, இழப்பீடு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை அறப்பணிக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

“அவர் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அவர்மீது வழக்கு தொடுப்போம்,” என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் இளைய மகனான திரு லீ சியன் யாங், ரிடவ்ட் ரோடு விவகாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் மூன்று பொய்யான கூற்றுகள் இருந்ததால், பொய்ச் செய்திக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ் திருத்தம் வெளியிடுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.

திரு லீ செவ்வாய்க்கிழமை இரவு திருத்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், பொஃப்மா அறிவிப்பு தவறானது என்றும், தனது கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஒரு புதிய பதிவை வெளியிட்டார்.

திரு லீயும் அவரது மனைவி லீ சுவெட் ஃபர்னும் தற்போது வெளிநாட்டில் வாழ்கின்றனர். சத்தியப் பிரமாணத்தின்கீழ் பொய் கூறியதற்காகக் காவல்துறையால் விசாரிக்கப்பட்டபோது இருவரும் சிங்கப்பூரிலிருந்து வெளியேறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!