பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் 212 பேரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர்களுக்கு வயது 17 முதல் 57 வரை என்று தெரிவிக்கப்பட்டது.
உளவுப் பிரிவு அதிகாரிகளும் காவல்துறையினரும் ஜூன் 12ஆம் தேதிக்கும் கடந்த திங்கட்கிழமைக்கும் இடையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தினர்.
வணிகக் கட்டடங்கள், உடல்தளர்த்து நிலையங்கள், ஒப்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புக் கட்டடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். மொத்தம் 207 மாதர்களும் ஐந்து ஆடவர்களும் கைதாயினர். அவர்களில் ஏழு பேர், பாலியல் தொடர்பான செயல்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாலியல் சேவை வழங்கும் நோக்கத்திற்காக மாது ஒருவரை கொள்முதல் செய்ததாக ஜூலை 19ஆம் தேதி 41 வயது சிங்கப்பூரர்மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் கைதானவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

