இருவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
43d7b7ce-e080-424e-b0cc-a5f2308f946a
சிறார் கொடுமை தொடர்பான சாதனங்களை வைத்து இருந்ததாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட இருந்தது. - படம்: ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறார் துன்புறுத்தல் தொடர்பான சாதனங்களை வைத்து இருந்ததாக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இருவர்மீது குற்றம் சுமத்தப்பட இருந்தது.

அந்த இருவரும் 2021 அக்டோபரில் கைதானவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

அவர்களில் ஒருவருக்கு வயது 24. மற்றொருவர் 39 வயதுள்ளவர்.

சுவா சூ காங் கிரசென்ட் அருகே கைதான 24 வயது ஆடவர், சிறார் கொடுமை சாதனத்தை விநியோகிக்க முயன்றார் என்றும் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காணொளிகளை அவர் வைத்திருந்தார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொருவர் பூன் லே டிரைவில் கைதானார்.

அவரிடத்தில் ஆபாச காணொளிகள் இருந்தது தெரியவந்தது. இந்தக் குற்றம் தொடர்பான கூடுதல் குற்றச்சாட்டு ஒன்றையும் இவர் எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்