ஜிஐசி முதலீட்டுக் குழுக்கள் சீரமைப்பு

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஜிஐசி சேமிப்பு முதலீட்டு நிதியம் மூலாதார பிரிவு ஒன்றைச் சீரமைக்கிறது. .

அந்தப் பிரிவு, 2016ஆம் ஆண்டில் கோல்டுமேன் சச்ஸ் குழுமத்தின் வங்கியாளரான பெர்சி வோங் தலைமையில் அமைக்கப்பட்டது.

ஜிஐசி நிதியம், தனது முதலீட்டுக் குழுக்களையும் உத்திகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி திருத்தி அமைக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.

காலக்கிரம முதலீட்டுக் குழுமம் (எஸ்ஐசி) என்ற அந்த மூலாதாரப் பிரிவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 30 ஊழியர்கள் இருந்தனர். அது இப்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர்களில் சிலர் வேறு பிரவுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

மற்றவர்கள் வேறு நிறுவனங்களில் சேர்கிறார்கள் என்று இந்த விவகாரத்திற்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

திரு வோங், 2021ல் ஜிஐசியில் சேர்ந்தார். அவரும் வெளியேறுவதாக சிலர் குறிப்பிட்டனர். இதன் தொடர்பில் திரு வோங் கருத்து தெரிவிக்கவில்லை.

இப்போதைய உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஜிஐசியிலேயே தொடர்ந்து இருந்து சேவையாற்றுவார்கள் என்றும் 10க்கும் குறைவானவர்களே வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜிஐசி பேச்சாளர் கூறினார்.

எஸ்ஐசி, ஜிஐசியில் உள்ள தன்னை யொத்த சில பிரிவுகள் அளவுக்குச் சிறப்பாக செயல்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். மேல் விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.

ஜிஐசி 2016 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளில் தனக்குக் கிடைத்த வருடாந்திர வருவாய் பற்றி இந்த வாரம் தெரிவித்தது. வருவாய் மோசமானதாக இருந்தது.

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்ததை தொடர்ந்து உலகப் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்ததையும் பணவீக்கம் உயர்ந்ததையும் அது சுட்டிக்காட்டியது.

எஸ்ஐசி குழுமம் என்பது ஜிஐசியின் நிலைவருவாய், பல சொத்துத்துறையின் மூலாதார அங்கம் என்று வழிவழியாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்தத்துறைக்கு நிலைவருவாய், பல சொத்துத்துறை தலைமை முதலீட்டு அதிகாரியான லியூ ட்ஸு மி தலைவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!