தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியாவில் $134,000 திருடி தப்பிய இருவர் மலேசியாவில் பிடிபட்டனர்

1 mins read
2ca60752-054e-4162-a8a9-58f72b88466f
கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடவர்கள். - சிங்கப்பூர் காவல்துறை
multi-img1 of 2

சிராங்கூன் ரோட்டில் உள்ள நாணய வர்த்தகரிடம் நூதன முறையில் $134,000 திருடிய இருவர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். திருட்டுச் சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்றதாக காவல்துறை தனது அறிக்கையில் கூறியது.

கைது செய்யப்பட்ட அப்ரலாவா இராக்லி, 36, டார்சேனியா டமாஸி, 70, ஆகிய இருவரும் ஜார்ஜியாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள்மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டது.

சம்பவ நாளன்று மாலை 4 மணியளவில், லிட்டில் இந்தியா ஆர்கேட்டில் உள்ள ‘மோனிஷா எக்சேஞ்ச்’ என்னும் நாணய வர்த்தகரை அவ்விருவரும் அணுகி சிங்கப்பூர் வெள்ளியை யூரோ நாணயமாகவும் அமெரிக்க டாலராகவும் மாற்ற வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

அவர்கள் கேட்ட தொகையைத் தந்தபோது சிங்கப்பூர் வெள்ளியைக் கொண்டு வருவதாகக் கூறி சென்றவர்கள் திரும்பி வரவேயில்லை. 70,000 யூரோவுடனும் 25,000 அமெரிக்க டாலருடனும் அவர்கள் மாயமானதாகக் கூறப்பட்டது.

நல்ல பணத்துக்குப் பதில் கள்ளப் பணத்தைக் கொடுத்து அவ்விருவரும் ஏமாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்