தாய்மார்கள் பாலூட்ட அதிக இடங்கள்

1 mins read
a397fa6e-a6cc-4611-bf0c-2c627459dc9b
பாதுகாப்பானதாகவும் சுத்தமானதாகவும் அமைக்கப்பட்டு உள்ள பாலூட்டி நிலையங்களைப் பயன்படுத்த கட்டணம் இல்லை. - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர்: வீட்டுக்கு வெளியிலும் குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கு தொடக்கநிலை நிறுவனம் ஒன்று வசதி ஏற்படுத்தித் தர முன் வந்துள்ளது.

‘கோ! மாமா’ என்னும் அந்த நிறுவனம் வேலையிடங்களில் பாலூட்டும் நிலையங்களை நிறுவி, நிர்வகிக்கிறது. பாதுகாப்பானதாக, சுத்தமானதாக அமைக்கப்பட்டு உள்ள பாலூட்டும் நிலையங்களைத் தாய்மார்கள் பயன்படுத்த கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

செந்தோசாவில் ஐந்து இடங்களில் நடமாடும் பாலூட்டி நிலையங்களை அமைத்து, அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அதனை அந்நிறுவனம் விரிவுபடுத்துகிறது.

குறிப்பாக, வர்த்தகக் கட்டடங்களிலும் தொழிற்கூடங்களிலும் உள்ள தாய்மார்களுக்காக இந்த வசதி விரிவுபடுத்தப்படுகிறது.

ஜனவரி மாதம் ஆயர் ராஜாவில் பாலூட்டி நிலையத்தை அந்நிறுவனம் அமைத்தது. அதனை ஜேடிசி நிர்வகிக்கிறது.

வரும் செப்டம்பர் மாதம் ஜூரோங்கில் உள்ள ஜேடிசி சம்மிட்டிலும் ஒன்-நார்த்தில் உள்ள ஃபுயூஷன்போலிஸ் டூ என்னும் இடத்திலும் அதிகமான பாலூட்டி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவை இரண்டும் ஜேடிசியின் சொத்துகள்.

பெருநிறுவன அலுவலகங்கள், அக்கம்பக்க சமூக நிலையங்கள், கடைத் தொகுதிகள், வழிபாட்டு இடங்கள், நிகழ்வு மற்றும் மாநாட்டுக் கூடங்களிலும் இதுபோன்ற பாலூட்டி நிலையங்களை தமது நிறுவனம் அமைத்திருப்பதாக கோ!மாமா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திருவாட்டி விவியன் லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்