சிங்கப்பூரில் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மறுசுழற்சி மின்கலன்களுக்குத் தேவை அதிகரித்து இருக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு இரு மின்கலன் மறுசுழற்சி நிறுவனங்கள் சிங்கப்பூரில் புதிய ஆலைகளை அமைக்க திட்டமிடுகின்றன.
நடமாட்டச் சாதனங்கள், கணினிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மின்கலன்களைக் கையாளும் டிஇஎஸ் சிங்கப்பூர் என்ற நிறுவனம், சிங்கப்பூரில் மின்சார வாகன மின்கலன்களுக்கான மறுசுழற்சி மின்கலன் ஆலையை அமைக்கப்போவதாக தெரிவித்து இருக்கிறது.
இப்போது இந்த நிறுவனம் துவாசில் ஓர் ஆலையைக் கொண்டிருக்கிறது. அது சுமார் 77.6 டன் மின்சார வாகன மின்கலன்களை மறுசுழற்சி செய்கிறது.
எண்ணெய்யிலும் மின்சாரத்திலும் செயல்படும் வாகனங்களில் பயன்படும் 76 டன் மின்கலன்களையும் அது மறுசுழற்சி செய்து வருகிறது.
அதேபோல, சி-கியூர் வேஸ்ட் மேனேஜ்மண்ட் நிறுவனமும் ஒரு புதிய மறுசுழற்சி ஆலையை அமைக்கத் திட்டமிடுவதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வின்ஸ் கோ தெரிவித்து இருக்கிறார்.
இப்போது இந்த நிறுவனம் ஜூரோங் நகராண்மைக் கழகத்திடம் இருந்து நிலத்தைப் பெற காத்திருப்பதாக அவர் கூறினார்.
சி-கியூர் வேஸ்ட் மேனேஜ்மண்ட் நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மின்வாகன மின்கலன்களைப் பதனீடு செய்து வருகிறது.

