தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முஸ்லிம் சட்டத்திற்கு எதிராக கற்பித்தல் கோட்பாடுகளைக் கொண்டதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
b5e34a81-e7da-428e-accc-8be66566f1bd
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அந்த ஆடவருக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விசாரணை தொடங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஸ்லிம் சட்டத்திற்கு எதிராக கற்பித்தல் கோட்பாடுகளைக் கொண்டதாகவும் அதிகாரிகளிடம் பதிவுசெய்யாமல் முஸ்லிம் சமய பள்ளி ஒன்றை நடத்தியதாகவும் 65 வயது ஆடவர் ஒருவர்மீது செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டப்படும்.

2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அந்த ஆடவருக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விசாரணை தொடங்கியதாக காவல்துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

விசாரணை முடிந்துள்ளதாகக் கூறிய காவல்துறை, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக்குப் பிறகு முஸ்லிம் சட்ட நிர்வாகச் சட்டத்தின்கீழ் அந்த ஆடவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

2004க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் முஸ்லிம் சட்டத்துக்குப் புறம்பாக கற்பித்தல் கோட்பாடுகளைக் கொண்டதாகக் கூறப்படுவது முதல் குற்றச்சாட்டு.

2017க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஜாலான் பிசாங்கில் உள்ள சிற்றுண்டி விடுதியில் முயிசிடம் பதிவுசெய்யாமல் முஸ்லிம் சமய பள்ளி ஒன்றை நடத்தியதாகக் கூறப்படுவது இரண்டாவது குற்றச்சாட்டு.

முஸ்லிம் சட்டத்திற்கு எதிராக கற்பித்தல் கோட்பாடுகளைக் கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, அல்லது $2,000 வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்