பிரதமரின் தேசிய தினச் செய்தியை அமைச்சர் சண்முகம் தமிழில் வாசிப்பார்

பிரதமரின் தேசிய தினச் செய்தியை அமைச்சர் சண்முகம் தமிழில் வாசிப்பார்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Aug 2023 - 5:41 pm

1 mins read
பிரதமர் லீ சியன் லூங்.
பிரதமர் லீ சியன் லூங். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு

பிரதமரின் தேசிய தினச் செய்தியை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தமிழில் வாசிப்பார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒலி 96.8 வானொலியிலும் தமிழ் உரை ஒலி, ஒளிபரப்பாகும்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சர் ஈஸ்வரன் தமிழ் மொழியில் வழங்கிவந்துள்ள பிரதமரின் தேசிய தினச் செய்தியை மீண்டும் அமைச்சர் சண்முகம் நீண்ட இடைவெளிக்குப் பின் வாசிக்கிறார்.

ஆங்கிலத்தில் பிரதமர் லீ சியன் லூங் வழங்கும் செய்தி சேனல் நியூஸ் ஏஷியா ஒளிவழியில் மாலை 6.45 மணிக்கு ஒளிபரப்பாகும்.

மாண்டரின் மொழியில் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் பிரதமரின் செய்தியை வழங்குவார். மலாய் மொழியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி வழங்குவார்.

நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் பிரதமரின் தேசிய தினச் செய்தியை www.pmo.gov.sg பிரதமர் அலுவலக இணையப் பக்கத்திலும் www.youtube.com/pmosingapore முகவரியில் யூடியூப் தளத்திலும் காணலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்