உணவக உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

உணவக உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

2 mins read
bff5e17a-0493-4aa5-8866-3c64efeda275
உணவக உரிமையாளரிடம் கிரெக் ஆஸ்டின் லின் வம்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: ஷின் மின்

ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதியில் ஜூன் மாதம் அங்குள்ள ஷாஷிக் உணவகத்தின் இயக்குநர், பங்குதாரரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அமெரிக்கர் ஒருவர் மீது நேற்று குற்றம்சாட்டப்பட்டது.

கிரெக் ஆஸ்டின் லின் எனும் அந்த நபர், உணவகத்தை மூடி விடுவேன் என்று திரு டான் டோங் கெய்னிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

“சீனாவிலிருந்து இங்கு நீ அழைத்து வந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் ஒரு கை பார்ப்பேன். சீனாவும் எனக்குச் சொந்தமானதுதான்,” என்று லின் வசைபாடியாதகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை லின் மீது மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. அதில் தொந்தரவு விளைவித்த இரண்டு குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

ஜூன் 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு டானை தொலைபேசியில் அழைத்த லின் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு உணவகத்துக்கு வந்த அவர் டானின் நெஞ்சில் கைவைத்து தள்ளியதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 20 நியூட்டன் ரோடு அருகில் உள்ள கம்போங் ஜாவா சாலையில் உள்ள தங்ளின் காவல் நிலையத்தில் லின் இருந்தபோது காவல் அதிகாரி தயாரித்த அறிக்கையில் கையெத்திட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை நீதிபதி லோரைன் ஹோவிடம் மேல்முறையீடு செய்ய விரும்புவதாகவும் வழக்கறிஞரை அமர்ததப்போவதில்லை என்றும் லின் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் வருவதால் சிங்கப்பூரின் சட்டம் தமக்குப் பரிச்சயமானது என்றார்.

காவல்துறை வேண்டுமென்றே இந்த விவகாரத்தை இழுத்தடிப்பதாகவும் லின் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்