தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிபிஎஸ் லாபம் 48% உயர்ந்து சாதனை அளவாக $2.69 பில்லியனை எட்டியது

1 mins read
f43192a1-de3e-4803-9253-5637773454c8
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியாவின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ்ஸின் நிகர லாபம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் $2.69 பில்லியனாகப் பதிவானது. - படம்: புளூம்பெர்க்

டிபிஎஸ் குழுமம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சாதனை அளவாக லாபம் ஈட்டியுள்ளதாக வியாழக்கிழமை அவ்வங்கி தெரிவித்தது. வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் அவ்வங்கியின் வருவாயும் கூடியது.

பொருளியல் மெதுவடைந்த வேளையில் 2023ல் கடன், கட்டண வருவாய் வளர்ச்சிக்கான தனது எதிர்பார்ப்புகளை லேசாக மட்டுப்படுத்தியும் டிபிஎஸ் சாதனை அளவாக லாபம் ஈட்டியது.

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியாவின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியின் நிகர லாபம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் $2.69 பில்லியனாகப் பதிவானது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததைவிட இது 48 விழுக்காடு அதிகம்..

இந்நிலையில், டிபிஎஸ் பங்குகளின் விலை வியாழக்கிழமை முடிவில் 8 காசு, அல்லது 0.24 விழுக்காடு குறைந்து $33.76ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்