பத்து வயதுச் சிறுவன் ஆஷர் மகேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணவில்லை என்று காவல்துறை தெரிவித்து இருந்ததை அடுத்து, அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்.
புளோக் 3 ஜாலான் புக்கிட் மேராவில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் அச்சிறுவன் கடைசியாகக் காணப்பட்டதாகக் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பின்னர் காவல்துறை வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.


