‘மத்திய சேம நிதியில் பணம் போடும் திட்டம்- ஒரு வாய்ப்பு’ என்ற தலைப்பில் புழங்கும் வாட்ஸ்அப் செய்தி ஒரு மோசடி வேலை என்று மனிதவள அமைச்சு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.
அந்தச் செய்தியுடன் ஒரு தொடர்பு முகவரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் உள்ளே சென்று தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிப்போருக்குக் கூடுதல் மத்திய சேம நிதிச் சந்தா கிடைக்கும் என்று அந்த மோசடி வாட்ஸ்அப் செய்தி கூறுகிறது.
அத்தகைய மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் இருந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு ஃபேஸ்புக் மூலம் அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.
யாருக்காவது அத்தகைய செய்தி வந்தால் அதை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
மோசடி வலையில் யாராவது சிக்கி இருந்தால் அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும் என்று அது தெரிவித்து இருக்கிறது.