தாம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், கொள்கை வகுப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்தை திரு டான் கின் லியன் வெளியிட்டிருந்தார்.
அது நடைமுறைக்குப் புறம்[Ϟ]பானது என்றும் தவறானது என்றும் கவனிப்பாளர்கள் கூறியிருந்தனர்.
அதுகுறித்துக் கருத்துரைத்த திரு டான், தம்மை விமர்சித்தவர்கள் அதிபரின் பொறுப்பு குறித்துக் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் என்று கூறினார்.
‘என்டியுசி இன்கம்’ காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான திரு டான், சிங்கப்பூரின் நிதிக் கையிருப்பு தொடர்பில் ரத்து அதிகாரத்தைப் பயன்[Ϟ]படுத்துதல், முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது எனும் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் அதிபர் அதுகுறித்து அணுக்கமாகக் கலந்துரையாட வேண்டும் என்றார்.
“அணுக்கமான கண்[Ϟ]காணிப்பு இல்லாமல் அதிபர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று நான் கருதவில்லை,” என்றார் திரு டான்.
“கலந்துரையாடும்போது அமைச்சர்களின் சிந்தனையை அதிபர் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மேம்பட்ட முடிவு எடுப்பதற்கு வழிகாட்ட இயலும்,” என்றார் அவர்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை அந்த முடிவுகள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்று திரு டான் குறிப்பிட்டார். வாழ்க்கைச் செலவினத்தைக் குறைத்தல், வீட்டு விலையைக் கட்டுப்படியாக வைத்திருத்தல், பாதுகாப்பான அதேநேரம் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைகளை வழங்குதல் போன்ற அம்சங்களை அவர் சுட்டினார்.
“அது அதிபரின் வேலை அன்று. அடிப்படையில் அவர் அரசியல்வாதிகளைப்போல் செயல்பட இயலாது. அரசாங்கத்திலிருந்து மாறுபட்ட அதிகார மையமாக அவர் விளங்க முடியாது,” என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், கலந்துரையாடல், ஒத்துழைப்பு, பொதுவான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அதிபரும் அமைச்சர்களும் மேம்பட்ட உத்திகளையும் மக்களுக்கான நலத் திட்டங்களையும் வகுக்க முடியும் என்கிறார் திரு டான் கின் லியன்.

