தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின் வணிக விற்பனையாளர்களுக்கு எதிரான புகார்கள் 54% ஏற்றம்

2 mins read
e76aba23-c53a-4497-a473-82aa4cef3392
இவ்வாண்டின் முற்பாதியில் தனக்கு மொத்தம் 7,316 புகார்கள் கிடைத்ததாக பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.  - படம்: பிக்சாபே

இணையத்தில் பொருள் வாங்குவது தொடர்பில், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டின் முற்பாதியில் பயனீட்டாளர்களிடம் வந்த புகார்களின் எண்ணிக்கை 54 விழுக்காடு ஏற்றம் கண்டன.

இணையத்தில் பொருள் வாங்குவது தொடர்பில், இவ்வாண்டின் முற்பாதியில் தனக்கு 1,703 புகார்கள் கிடைத்ததாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதற்கு 1,107 புகார்கள் கிடைத்தன.

வாங்கிய பொருள் வீடு வந்துசேர்வதில் பிரச்சினை, பொருள்களில் குறைபாடு தென்பட்டது அல்லது ஒப்பந்தத்திற்கு உட்படாதது, பொருள்கள் குறித்து அவற்றின் விற்பனையாளர்கள் தவறாகக் கூறியது போன்றவை புகார்களில் அடங்கும்.

“இணையத்தில் பொருள் வாங்குவது அதிகரித்திருப்பதே புகார்கள் அதிகரிக்கவும் காரணமாகும்,” என்று பயனீட்டாளர் சங்கம் கூறியது.

இணையத்தில் பொருள் வாங்குவது தொடர்பிலான புகார்களில் 172 புகார்கள் மின்சார, மின்னணுவியல் சாதனங்களுடன் தொடர்பானவை. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான புகார்களைவிட இது 67 விழுக்காடு அதிகம்.

இதற்கிடையே, இவ்வாண்டின் முற்பாதியில் தனக்கு மொத்தம் 7,316 புகார்கள் கிடைத்ததாக பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதற்குக் கிடைத்த 7,960 புகார்களைவிட இது 8 விழுக்காடு குறைவு.

இவ்வாண்டின் முற்பாதியில் மின்சார, மின்னணுவியல் துறைக்கு எதிராக ஆக அதிகமாக 653 புகார்கள் அளிக்கப்பட்டன. அதற்கு அடுத்தடுத்த நிலையில் வீட்டுப் புதுப்பிப்பு ஒப்பந்ததாரர்கள், வாகன விற்பனையாளர்கள், அழகு பராமரிப்பு, அறைகலன் துறைகள் வந்தன.

“பெரும்பாலான துறைகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறைந்தன. சில துறைகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் அதிகரித்தாலும், அது இலேசான அதிகரிப்பாக இருந்தது,” என்று பயனீட்டாளர் சங்கம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்