தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிபிஎஸ் தலைமை நிர்வாகி $3.4 மி. பங்குகளை விற்றார்

2 mins read
da3b3917-9930-44b9-b24d-a153cdfdf57e
டிபிஎஸ் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா, அந்த வங்கியில் இன்னமும் 0.085% அல்லது 2,185,721 சாதாரணப் பங்குகளை வைத்துள்ளார். - படம்: புளூம்பர்க்

டிபிஎஸ் குருப் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாகியான பியூஷ் குப்தா, அந்த வங்கியில் தான் வைத்திருக்கும் பங்குகளில் 100,000 பங்குகளை $3.4 மில்லியன் விலைக்கு விற்று இருக்கிறார்.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் தாக்கலான ஆவணங்கள் மூலம் இது தெரியவருகிறது.

திரு குப்தா, வெள்ளிக்கிழமை தனித்தனியான இரண்டு திறந்த சந்தைப் பரிவர்த்தனைகளில், தலா $34.32 விலைக்கு 8,100 பங்குகளையும் தலா $34.2553 விலைக்கு 91,900 பங்குகளையும் விற்றார்.

மொத்தமாகச் சேர்த்து அந்தப் பங்குகள் அவருக்கு டிபிஎஸ் குழுமத்தில் உள்ள உரிமையில் 4.4% ஆகும்.

டிபிஎஸ் குழுமத்தில் 0.085% அல்லது 2,185,721 சாதாரணப் பங்குகள் இன்னமும் அவர் வசம் உள்ளன.

டிபிஎஸ் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சாதனை அளவாக $2.69 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்தது.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 48% அதிக நிகர லாபம் சாதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகித உயர்வே இதற்கான முக்கிய காரணம் என்று வியாழக்கிழமை திரு குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் திரு குப்தா தன் பங்குகளை விற்றார்.

பொருளியல் நிச்சயமில்லாத நிலையில் இருந்து வருகிறது. வட்டி விகிதமும் அதிகமாக உள்ளது.

இந்தச் சூழலில் வங்கித்துறையில் கொடுக்கப்படும் கடன் தொகையில் அதிக வளர்ச்சி இந்த ஆண்டில் அவ்வளவாக இல்லாமல் போகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, டிபிஎஸ் நிர்வாக சபை, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பங்கு ஒன்றுக்கு 48 காசு லாப ஈவை அறிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டின் ஒரு பங்கிற்கான லாப ஈவைவிட 6 காசு அதிகம்.

குறிப்புச் சொற்கள்