தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$6,700க்கு மேல் மதிப்புடைய பால்மாவு திருடிய ஆடவருக்குச் சிறை

1 mins read
61808291-b181-4230-a12d-d11d49f28154
தண்டனை விதிக்கப்பெற்ற ஆடவர் இதற்கு முன்னரும் பால்மாவு திருடி தண்டனை அனுபவித்துள்ளார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேரங்காடிகளிலிருந்து பலமுறை பால்மாவு திருடிய ஆடவருக்குத் திங்கட்கிழமை 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதே குற்றத்திற்காக அவருக்குப் பலமுறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் அதனைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 38 வயது ஆடவரின் பெயர் ஜேம்ஸ் ஹோ. 2021ஆம் ஆண்டு இரண்டு மாதங்களில் $6,700க்கும் அதிக மதிப்புடைய 70 பால்மாவுக் கலன்களை 16 வெவ்வேறு பேரங்காடிகளிலிருந்து திருடியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் சிறையிலிருந்து விடுதலையான இரண்டு மாதங்களில் மீண்டும் குற்றச்செயல் புரிந்ததால் அவருக்குக் கூடுதலாக 233 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜேம்ஸ் தன்மீது சுமத்தப்பட்ட ஐந்து திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்