தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளுங்கள்

தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளுங்கள்

1 mins read
28b70b64-05d0-4bae-be73-3ce5f2e9f2cc
காணாமல் போன இரண்டு சிறுமிகளில் ஒருவரான சுவா லி ஃபாங் ஷெல்லி (இடது) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மற்றொருவரான ராதிகா மோகனராஜாவை இன்னமும் காணவில்லை. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்த ஒரு 13 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சுவா லி ஃபாங் ஷெல்லி என்ற அந்தச் சிறுமி, எண் 51, எட்ஜ்டேல் பிளேன்ஸ் முகவரியில் கடைசியாக புதன்கிழமை காணப்பட்டார்.

அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி திங்கட்கிழமை பொது மக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டது.

அந்தச் சிறுமி கண்டிபிடிக்கப்பட்ட அதே வேளையில், ராதிகா மோகனராஜா என்ற வேறு ஒரு 13 வயது சிறுமி இருக்கும் இடம் இன்னமும் தெரியவில்லை.

இந்தச் சிறுமி, கடைசியாக தோ பாயோ லேரோங் 8ல் ஜூலை 25ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணிக்குக் காணப்பட்டார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1800-223-0000 என்ற நேரடி காவல்துறை எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். police.gov.sg/i-witness என்ற முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம்.

தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் பரம ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்