தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிபந்தனையின் பேரில் விடுதலையான ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
e2623a0b-b61a-48d0-88a5-ad6501d8eb5e
முகம்மது ஹைரிசால் கமார்சமான் என்ற ஆடவர், 2022 செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டு இருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முகம்மது ஹைரிசால் கமார்சமான் என்ற ஆடவர் 2022 செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

அந்த நிபந்தனையின்படி, அந்த ஆடவர் 2022 செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 2024 மே 20ஆம் தேதி வரை குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆனால் வெளியே வந்து ஒன்பது மாதங்களில் ஹைரிசால் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டார்.

அந்த ஆடவர், ஹேவ்லாக் ரோடு அருகே இருக்கும் யோர்க் ஹில் அடுக்குமாடி வீடு ஒன்றில், சித்தி சுலைகா ஏ ரஹ்மான் என்ற மாதை, அவரின் வலது மணிக்கட்டில், சூடாக இருந்த முடி அலங்காரச் சாதனத்தைக் கொண்டு காயப்படுத்திவிட்டார்.

இது ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அவர் வேறு ஒரு குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் மத்திய காவல்துறை வளாகத்தில் சட்டவிரோதமாக காணொளிப் படம் எடுத்து அதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறிவிட்டதாக அந்த ஆடவர் மீது இப்போது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

அவரின் வழக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

சித்தி சுலைகா செவ்வாய்க்கிழமை மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் முன்னிலையானார். அதே சட்டத்தின்படி அந்த மாதின் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சித்தி சுலைகா, ஜூலை 13ஆம் தேதி முற்பகல் 10.20 மணிக்கு நியூ பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் காவல்துறை வளாகத்தில் ஹைரிசாலுடன் காணொளிப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மாது, அதே இடத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முற்பகல் 10.20 மணிக்கு ஹைரிசாலுடன் அதே குற்றத்தைச் செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சித்தி சுலைகா செப்டம்பரில் அந்தக் குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்