ஓசிபிசி வங்கிச் செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம்; மாறுபட்ட கருத்துகள்

ஓசிபிசி வங்கிச் செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம்; மாறுபட்ட கருத்துகள்

2 mins read
e75920d7-3614-4c27-a781-dc324a8fae38
ஓசிபிசி தன்னுடைய வங்கிச் செயலியை ஆகஸ்ட் 5ஆம் தேதி மேம்படுத்தியது. அப்போது புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.   - படம்: சாவ் பாவ்

ஓசிபிசி வங்கியின் செயலியில் இடம்பெற்றிருக்கின்ற புதிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

சாம்சங் ஆண்ட்ராய்டு கைப்பேசியில் ஓசிபிசி வங்கிச் செயலியில் கையெழுத்திட முயன்றபோது அந்தச் செயலியை அதிகாரபூர்வமற்ற தரப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து இருப்பதாகத் தனக்கு எச்சரிக்கைச் செய்தி வந்தது என்று நிதித்துறை ஆலோசகரான நிக்கலஸ் யீ, 46, என்பவர் கூறினார்.

அத்தகைய செயலிகளை கைப்பேசியில் இருந்து அகற்றிவிட்டால்தான் ஓசிபிசி இணைய வங்கிச் சேவைகளைப் பெற முடியும் என்று அந்த எச்சரிக்கைச் செய்தி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

திருட்டு, மோசடி மென்பொருள்கள் உள்ளே நுழைந்தால் அது பற்றி எச்சரிக்கை விடுக்கும் வகையில் தன் கைப்பேசியில் பாதுகாப்பு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்திருப்பதாகக் கூறும் அவர், ஓசிபிசி செயலியைப் பொறுத்தவரை அப்படி எந்த எச்சரிக்கையையும் அந்தப் பாதுகாப்பு மென்பொருள் வெளிப்படுத்தவில்லை என்றார்.

ஓசிபிசி மின்னிலக்கச் செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு கைப்பேசி பயனீட்டாளர்களுக்கு சனிக்கிழமை பாதுகாப்பு மேம்பாட்டு அம்சம் ஒன்று அனுப்பப்பட்டது.

திருட்டு மென்பொருள்களில் இருந்து கைப்பேசியைக் காக்கும் வகையில் அது அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரபூர்வ தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யாமல் வேறு தளங்களில் இருந்து செயலிகளை யாரேனும் பதிவிறக்கம் செய்திருந்தால் அவர்கள் தங்கள் கைப்பேசியில் ஓசிபிசி இணைய வங்கிச் சேவைகளை எட்ட முடியாத சூழ்நிலை இருந்தது.

அவர்கள் அந்தச் செயலிகளை அகற்றிவிட்டு மறுபடியும் ஓசிபிசி செயலி வங்கிச் சேவைகளைப் பெற வேண்டி இருக்கும்.

சிங்கப்பூர் பயனீட்டாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கூகல் பிளே, ஆப்பிள் ஆப்ஸ்டோர், ஹுவாவெய் செயலித் தளம் ஆகியவை அதிகாரபூர்வ செயலிகளைப் பெறுவதற்கான வழிகளாக இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்