தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் முன்னேற்றத்தை விளக்கிய ஒளிவிளக்கு காட்சி

1 mins read
242d5505-c382-4d0b-83d0-3442c0650915
ஒன்றுகூடிய சிங்கப்பூர் மக்களின் ஒரு பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஒளிவிளக்கை அடிப்படையாகக் கொண்ட அம்சங்கள் அணிவகுப்பில் முக்கிய இடம் பிடித்தன.

மூன்றாவது அங்கத்தில் அணிவகுப்புத் தரையில் கண்கவர் வடிவங்களில் ஒளிவிளக்குகள் மிளிர்ந்தன.

நான்காவது அங்கத்தில் ‘சுடர்விட்டு ஒளிர்க’ என்ற பொருளைக் கொண்ட தலைப்பான ‘ஷைன் யூர் லைட்’ என்ற பாடல் பாடப்பட்டது.

இந்த ஒளிவிளக்கு காட்சி கொள்ளைநோயின் கொடிய பிடியிலிருந்து விடுபட்ட சிங்கப்பூர், முன்னேற்றத்தை நோக்கி பிரகாசமாகப் பீடுநடை போடுவதை உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தேசிய தின அணிவகுப்பு காட்சிப் படைப்பு இயக்குநர் ராய்ஸ்டன் டான் தெரிவித்தார்.

இந்தப் பொறுப்பை 2020ஆம் ஆண்டு ஏற்றபோது கொள்ளைநோய் பரவி இருந்ததால் விரும்பிய வண்ணம் ஒளிக்காட்சிகளை அமைக்க இயலாமற்போனதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு, மிக மிக பெரிய காட்சியாக அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகக் கூறினார்.

நடந்து முடிந்த அணிவகுப்பில் ஒளிப்படைப்பு மிகவும் பிரமாதமாக அரங்கேறியதாகவும் தமது கனவு நிறைவேறியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்