வழிபாட்டுப் பெட்டி தொடர்பிலான சச்சரவில் தம் அண்டைவீட்டாரின் வீட்டு வாசல் கதவுக்குத் தீவைத்த ஆடவர் ஒருவருக்கு வியாழக்கிழமை 13 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாண்டியன் என்று அழைக்கப்படும் பேட்ரிக் ஃபிரான்சிஸ், 2022 மே 8ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு தம் அண்டைவீட்டாரின் வாசல் கதவுக்கு தீ மூட்டி குறும்புத்தனம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஃபிரான்சிசின் குடும்பத்தாருக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகத் தெரியும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டவர் தம் வீட்டு வாயிலுக்கு சாயம் பூச வேண்டியிருந்தது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வீட்டு வாசல் கதவை மாற்ற உதவியது. பாதிக்கப்பட்டவர் அதற்குச் செலவு செய்யத் தேவையில்லை.
பாதிக்கப்பட்டவருக்கு ஃபிரான்சிஸ் $1,000 இழப்பீடு கொடுத்தார்.