லாரியிலிருந்து இறங்கியபோது தள்ளிவிடப்பட்டு விழுந்த ஊழியருக்கு முதலாளி இழப்பீடு

1 mins read
a4d855fa-c6c5-408c-8dc8-fc050e65833d
கீழே விழுந்து காயமுற்ற ஊழியருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை தனியாக மதிப்பிடப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லாரியிலிருந்து இறங்கிக்கொண்டு இருந்தபோது தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து முழங்காலில் காயமுற்ற கப்பல் பழுதுபார்ப்பு ஊழியர் ஒருவருக்கு, அவருடைய முதலாளியிடமிருந்து இழப்பீடு பெற உரிமை இருப்பதாக மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய நாட்டவரான ராமலிங்கம் முருகன், 37, ‘ரிகெல் மரின் செர்வீசஸ்’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். 2021ல் நிகழ்ந்த அந்த விபத்தில் தமக்கு ஏற்பட்ட காயத்திற்காக இழப்பீடு கோரினார்.

இந்நிலையில், மாவட்ட நீதிபதி டான் மே டீ ஆகஸ்ட் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பில், வழக்கு தொடுத்தவருக்கு பாதுகாப்பு வழங்க அந்நிறுவனம் தவறியதாகக் கூறினார்.

இழப்பீட்டுத் தொகை தனியாக மதிப்பிடப்படும்.

திரு முருகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு, 2021 ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதிவரை அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

திரு முருகனைப் பிரதிநிதித்த திரு பெருமாள் ஆதித்தம் மற்றும் திரு முகம்மது அஷ்ரஃப் சையது அன்சாரி, கவனக்குறைவாக இருந்ததற்காக திரு முருகனின் முதலாளிக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

அந்த விபத்தைக் கண்ட மற்ற ஊழியர்களிடமிருந்து சாட்சியம் பெற அந்நிறுவனம் தவறியதையும் நீதிபதி சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்