வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) வீட்டுக் கடன் விகிதத்தைப்போல 2.6% வட்டி விகிதத்துடன் கூடிய பிஓஎஸ்பி வீட்டுக் கடன் திட்டம் டிசம்பர் இறுதிவரை நீட்டிக்கப்படும்.
சிங்கப்பூரர்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவ டிபிஎஸ்/பிஓஎஸ்பி சனிக்கிழமை அறிவித்த $40 மில்லியன் மதிப்பிலான தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீட்டுக் கடன் திட்டம் அமைகிறது.
$2,500க்கும் அதற்கும் குறைவாக மாத வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இத்திட்டம் கிடைக்கும். புதிய வீவக வீட்டு உரிமையாளர்களும் வீட்டுக் கடன் திட்டங்களை மாற்ற விரும்புவோரும் இத்திட்டத்துக்குத் தகுதிபெறலாம்.
விலைவாசி உயர்வைச் சமாளிப்பது அரசாங்கம், வர்த்தகங்கள், சமூகக் குழுக்களின் கூட்டு முயற்சி என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை கூறினார்.


