ஆகஸ்ட் 20ஆம் தேதி இடம்பெறும் இவ்வாண்டுக்கான தேசிய தினப் பேரணியில் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றுவார்.
மாலை 6.45 மணிக்கு அவர் முதலில் மலாய் மொழியில் உரையாற்றுவார். பின்னர் இரவு 7 மணிக்கு மாண்டரின் மொழியிலும் இரவு 8 மணிக்கு ஆங்கிலத்திலும் உரையாற்றுவார்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் இடம்பெறும் தேசிய தினப் பேரணி உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் வானொலி நிலையங்களிலும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்படும்.
மேலும் கீழ்க்காணும் இணையத் தளங்களிலும் பேரணி உரை நேரலையாக இடம்பெறும்.
பிரதமர் அலுவலக யூடியூப் (www.youtube.com/pmosingapore) பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/leehsienloong) ரீச் அமைப்பின் ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/REACHSingapore) Mewatch.sg, cna.asia, CNA யூடியூப் and 8world.com
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணையத் தளம், ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் தளம் ஆகியவற்றில் பேரணி உரையின் நேரலை இடம்பெறும்.