யாழ்ப்பாணம்: பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை காலை பருத்தித்துறை கற்கோவளம் ராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பருத்தித்துறை காவல்துறையினர் கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்புவைத்து சட்டவிரோத செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.
“ராணுவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ராணுவத் தளபதி கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள நான்காவது சிங்க ரெஜிமென்ட் படையணி ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தனியார் இடத்தில் உள்ள ராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால் அரசாங்க இடத்தில் அதை அமையுங்கள்,” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

