பங்குச் சந்தை நிகர லாபம் 2வது காலாண்டில் 23.1% கூடியது

1 mins read
0a8ac973-88b3-45e0-ae52-570041768a2c
குழுமத்திற்கான நடைமுறை வருவாய், ஆண்டுக்கு ஆண்டு அடைப்படையில் 7.9% அதிகரித்தது. $577.4 மில்லியனாக இருந்த அந்த வருவாய், $623 மில்லியன் ஆகியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பங்குச் சந்தை (எஸ்ஜிஎக்ஸ்), ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $286.3 மில்லியன் நிகர லாபம் ஈட்டியது.

இது, ஓராண்டுக்கு முன் இதே காலத்தில் இந்தச் சந்தை ஈட்டிய $232.7 மில்லியன் நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 23.1% அதிகமாகும்.

குழுமத்திற்கான நடைமுறை வருவாய், ஆண்டுக்கு ஆண்டு அடைப்படையில் 7.9% அதிகரித்தது. $577.4 மில்லியனாக இருந்த அந்த வருவாய், $623 மில்லியன் ஆகியது.

நாணயம், பண்டக வர்த்தகமே இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்கள் என்று பங்குச் சந்தை குறிப்பிட்டது. $133.2 மில்லியனாக இருந்த இந்த வர்த்தகம் 35% அதிகமாகி இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $179.8 மில்லியனாகக் கூடியது.

பணப் பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் $197.7 மில்லியனில் இருந்து $175 மில்லியனாக 11.5% குறைந்துவிட்டதாக பங்குச் சந்தை தெரிவித்தது.

பட்டியலிடப்பட்ட புதிய பங்குகள் எண்ணிக்கை எட்டாகக் குறைந்தது. ஒரு பங்கு வருவாய்,சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 21.8 காசில் இருந்து 26.8 காசாகக் கூடியது.

குறிப்புச் சொற்கள்