பாலர் பள்ளி மாணவர்களுக்குப் பாதுகாப்புத் திறன்களைக் கற்பிக்கும் புதிய கேலிச்சித்திரக் காணொளி

1 mins read
edf238b9-873d-4613-b03d-8e6a05ae2722
ஃபெர்ன்வேல் லிங்க் வட்டாரத்தில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் புதிய கேலிச்சத்திரக் காணொளியை வெளியிட்ட அதிபர் ஹலிமா யாக்கோப். - படம்: எஸ்பிஎச்

பாலர் பள்ளி மாணவர்களுக்குப் பாதுகாப்புத் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் புதிய கேலிச்சித்திரக் காணொளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய காணொளிக்கு ‘தி கார்டன் ஆஃப் சேஃப்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை, சிறார் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பட்ட சேவையான பேவ் இந்த கேலிச்சித்திரக் காணொளியை தயாரித்துள்ளது.

இந்தக் காணொளியை ஃபெர்ன்வேல் லிங்க் வட்டாரத்தில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் வியாழக்கிழமை அதிபர் ஹலிமா யாக்கோப் வெளியிட்டார்.

4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்களுக்காக இந்த இரண்டு நிமிட இசைக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு உடல் பாதுகாப்பு விதிமுறைகளும் பாதுகாப்பு வழிமுறைகளும் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.

மற்றவர்கள் தங்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளப் பார்க்கும்போது மறுப்பு தெரிவிப்பதிலிருந்து அதுகுறித்து நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் தெரிவிப்பது குறித்தும் காணொளி மூலம் கற்பிக்கப்படுகிறது.

இத்திட்டத்துக்கு முழுமையான அணுகுமுறையை பேவ் அமைப்பு கடைப்பிடிப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

“குடும்ப வன்முறையைத் தடுப்பதில் பேவ் போன்ற அமைப்புகளால் பங்காற்ற முடியும். அதே சமயம், உதவி தேவைப்படும் குடும்பம், நண்பர்கள், அண்டைவீட்டாருக்கு தனிநபர்களாகிய நாம் உதவிக் கரம் நீட்டலாம் அல்லது ஆலோசனை வழங்கலாம்,” என்று அதிபர் ஹலிமா கூறினார்.

அதிபர் சவால், புதிய கேலிச்சத்திரக் காணொளிக்கு நிதி வழங்கியது.

குறிப்புச் சொற்கள்